News Update :

Tuesday, July 11, 2017

TamilLetter

சவூதியில் 4 பேருக்கு மரண தண்டனை

சவூதியில் 4  பேருக்கு  மரண தண்டனை 

சவூதி அரேபியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய நான்கு தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா நாடான சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள குவாடிப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தீவிரவாதிகள் நால்வருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், எந்த முறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-