News Update :

Sunday, July 2, 2017

TamilLetter

ஈரானில் 239 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் 239 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்


நடப்பு ஆண்டின் முதல்பாதியில் ஈரானில் 239 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் ஈரானிய ஆட்சியாளர்களால் 45 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டது. மீதமுள்ளவை, அதிகாரபூர்வ மட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டவை.

தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் பாதிப் பேர் போதை பொருள் தொடர்புடைய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர் எனவும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் மூன்று பேர், குற்றம் இழைத்தபோது 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர் என்றும் குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு, குறைந்தது 530 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற புள்ளிவிபரங்கள் அடிப்படையில் ஈரானிய மனித உரிமைகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-