News Update :

Sunday, July 16, 2017

TamilLetter

19ல் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் அட்டாளைச்சேனையின் முக்கியஸ்தர்கள் கூட்டாக இராஜீனமா செய்வதற்கு யோசனை

19ல்  முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் அட்டாளைச்சேனையின் முக்கியஸ்தர்கள் கூட்டாக இராஜீனமா செய்வதற்கு யோசனை


அட்டாளைச்சேனை சிறாஜ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி கட்சியின் தலைமையகமான தாறுஸலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்ர்தர்கள்   உட்பட உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்;,உள்ளுராட்சி சபைத் தேர்தல் என நாட்டில் ஏற்படப் போகும் நிகழ்வுகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடுவதால் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகின்றது.

அத்தோடு கட்சியின் தலைமையினால் கட்சியின் அடிமட்ட போராளிடமும்;,வாக்காளர்களிடமும்  வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பாக இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென  கட்சியின் உள்ளுர் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அத்தோடு அட்டாளைச்சேனை பிரதேசத்திலிருந்து கலந்து கொள்ளும் உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.எம்.எ.கபூர்,பளீல் பீ.ஏ, யு.எல்.வாஹீட்,ஆகியோர் அட்டாளைச்சேனையின் தேசியப்பட்டியல் காலம் தாழ்த்தப்படுவது தொடர்பாக உயர்பீடத்தில் கேள்வியெழுப்ப வேணடிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அன்றைய தினமே கட்சியின் தலைமை ;  அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியலை பகிரங்கமாக அறிவிக்கா வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளதாகவும், அப்படி கட்சித் தலைமை மீண்டும் காலம் தாழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டால் இம் மூன்று பேரும் கட்சியில் தாம் வகிக்கும் உயர்பீட உறுப்பீனர் பதவிகளை இராஜினமா செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-