சுற்றுலா பஸ் தீப்பிடித்தது, 17 பேர் உயிரிழந்த கோரம்!
மூனிச், ஜூலை.4- ஜெர்மனியில் சரக்கு வாகனம் மீது மோதிய சுற்றுலா பேருந்து தீப்பிடித்ததில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர்.
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் ‘ஸ்டாம்பாக்’ என்ற இடத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் பயணிகளுடன் வேகமாக சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது.
இதை அடுத்து இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. தீ வேகமாக பரவியதால் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து விட்டன.
பேருந்தில் இருந்து 31 பேர் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே 17 பேர் எரியும் பஸ்சிற்குள் சிக்கி கருகி உயிரிழந்தனர். அந்தப் பேருந்தில் இரண்டு ஓட்டுனர்கள் உட்பட 48 பேர் பயணம் செய்துள்ளனர்.
விபத்து பற்றிய விபரம் அறிந்து தீயணைப்புப்படை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்தன. அங்கிருந்து தீக் காயம்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமையும் மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tuesday, July 4, 2017
சுற்றுலா பஸ் தீப்பிடித்தது, 17 பேர் உயிரிழந்த கோரம்!

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-