ஹஸனலி 17 வருடம் கோமாவில் இருந்தாரா? மக்கள் சந்தேகம்
எஸ்.மன்சுர்
நாரிப் போன பழைய சாதத்தை புதிய போத்தலில் அடைக்க முனைகின்றார் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஏம்.ரி ஹஸனலி
அதாஉல்லா முஸ்லிம் சமூகத்தின் விரோதி,அமைச்சர் ரிஷாட் அரசியல் வியாபாரி என 17 வருடங்கலாக தாரக மந்திரமாக கூறி வந்த ஹஸனலி இன்று இவர்களை சரி காண்பது எதற்காக .
அதே 17 வருடங்கள் ரவுப் ஹக்கீம் மேன்மையானவர்,வல்லவர், நல்லவர் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது எதற்காக. இருந்தும் அப்படி சொன்னதில் தனது சுயநலத்தின் தேவையாக அது அமைந்திருந்தாலும் காலம் ஹஸனலியின் சுயரூபத்தை வெளிக்காட்ட தயங்கவில்லை.
ஹஸனலி மக்களை முட்டாள்களாக பார்க்கின்றாரா? அல்லது அவர் முட்டாளாகிப் போய்விட்டாரா? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது
அமைச்சர் ரவுப் ஹக்கீம் பலவீனப்பட்ட தலைவர் என குற்றம் சாட்டும் ஹஸனலியின் கருத்தை நாம் ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும் ஹக்கீம் குற்றவாளியாகவே பார்க்கப்பட வேண்டுமே தவிர அதற்கு பகரமாக எப்படி இன்னுமொறு குற்றவாளியை நிரபராதி என கூற முடியும்.
அதாஉல்லாவும்,ரிஷாட்டும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய ஹஸனலி இன்று அவர்களுக்கு நற்சான்று வழங்குவதன் மூலம் 17 வருடமாக அவர் கோமாவில் இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலோங்கியுள்ளது. .அத்தோடு அமைச்சர் ஹக்கீமை பிழை காண்பதற்கு 17 வருட கால இடைவெளி ஹஸனலிக்கு தேவைப்பட்டுள்ளது.
இப்படியான ஒரு நபர்தான் இன்று முஸ்லிம்களின் எதிர்காலத்திற்காக போராட புறப்பட்டுள்ளார்.என்பது எவ்வளவு வேடிக்கை.
Tuesday, July 4, 2017
ஹஸனலி 17 வருடம் கோமாவில் இருந்தாரா? மக்கள் சந்தேகம்

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-