News Update :

Sunday, July 9, 2017

TamilLetter

ஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம்


ஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம்


விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனியில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனி புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்மனி அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் தோமஸ் டே மிஸ்யேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அமைச்சர் மற்றும் புலனாய்வு பிரிவு பிரதானியினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டு இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருக்கு புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவி செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்குள் செயற்படுகின்ற கலாச்சார திட்டங்கள் ஊடாக விடுதலை புலிகளின் நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்கப்படுவதாக ஜேர்மனி புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-