News Update :

Wednesday, June 28, 2017

TamilLetter

சவுதி அரேபியா ஆத்திரம் - நகரjத்தை தரைமட்டம் ஆக்கியது




ரியாத்இ ஜூன்.28- தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கூறிஇ மக்கள்எதிர்ப்பையும் மீறி அவாமியா' நகரை இடித்து தரைமட்டம்ஆக்கியது சவுதி அரசாங்கம். சவுதி அரேபியாவில் எண்ணெய்வளம் மிகுந்த நகரமான அவாமியாஇ ஷியா முஸ்லிம்கள் அதிகம்வாழும் பிரதேசமாகும். இது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தவரலாற்று சிறப்புமிக்க நகரமாகும்.
'
இந்நகரம் தற்போது ஈரானை அடிப்படையாகக் கொண்டுஇயங்கும் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்றும்அந்நகரில் உள்ள பழமையான வீடுகளைத் தீவிரவாதிகள்ஆக்கிரமித்து விட்டனர் என்றும் கூறிய சவுதி அரசு அவாமியாநகரை இடித்து தரைமட்டமாகும் பணியை தொடங்கியுள்ளது.

இது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமின்றிநகரை இடிக்கும் பணியை துவங்கிய சவுதி அரசுக்கு எதிராகபொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது பலர் தாக்கப்பட்டதுடன்சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர். இருப்பினும் சவுதி அரசு தமதுமுடிவை மாற்றிக்கொள்ளும் நிலையில் இல்லை எனவும் மேலும்முன்னெடுத்து செல்லவே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நகரை தரைமட்டமாக்க காரணம் என்ன? என்று சவுதியின்உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மன்சூர் அல்-துர்கி தெரிவிக்கையில் தீவிரவாதிகள் இந்நகரைஆக்கிரமித்துக்கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் தீவிரவாதத் தாக்குதல்களில்பலியாகியுள்ளனர். எனவே சவுதி அரசு இயந்திரங்களை கொண்டுஅந்த நகரை தரைமட்டமாக்கி வருகிறது.
இப்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த தீவிரவாதிகள் முயற்சிசெய்து வருகின்றனர். எனினும் சவுதி அரசு இந்தத் தீவிரவாதத்தைமுற்றிலுமாக ஒழிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-