Hall of Fame விருதை பெற்ற முதல் இலங்கை வீரர் முரளி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 'ஹோல் ஒப் பேம்' (வாழ்த்தரங்கம்) விருதை பெற்றுக்கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் சபையால், கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு வழங்கும் உயரிய விருது இதுவாகும் என்பதோடு, கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது வாழ்நாளில் பெறக்கூடிய கௌரவ விருதும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் (08) இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியின் இறுதியில் குறித்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அந்த வகையில் குறித்த விருதைப் பெறும் முதலாவது இலங்கை கிரிக்கெட் வீரர் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தையா முரளிதரன்
பிறந்த தினம்: ஏப்ரல் 17, 1972 (கண்டி)
வயது: 45
விக்கெட்டுகள்
டெஸ்ட் - 800
ஒரு நாள் - 534
t20 - 13
மொத்தம் - 1347
இலங்கை கிரிக்கெட் சேவை - 19 வருடங்கள்