ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. இராஜினாமா செய்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில்,
‘நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவானது உரிய வகையில் செயற்படவில்லை.
அபிவிருத்திகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படுவதில்லை. அதிலுள்ள உறுப்பினர்கள் ஒழுக்க விழுமியங்களுக்கு கட்டுப்படுவதில்லை.
இதன் காரணமாகத்தான் இணைத் தலைவர் பதவியை இராஜினாமா செய்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.