பொத்துவில் அஷ்ரப் தங்கம் வென்று தாய் நாட்டை கௌரவப் படுத்தியுள்ளார் - ஏ.எல். தவம்
இன்று கிர்கிஸ்தானில் இடம் பெற்ற பகிரங்க மெய்வல்லுனர் 100 மீற்றர் ஒட்டப் போட்டியில் இலங்கை சார்பாக அஸ்ரப் பங்கு பற்றி முதலாவது இடத்தை பெற்றதன் மூலம் தங்க பதக்கம் வென்றார்.
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த வீரன் அஷ்ரப்பின் வெற்றி தமது தாய் நாட்டிற்கும் அவர் பிறந்த பொத்துவில் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளது
பிறந்த மண்ணின் புகழை . சர்வதேசம் முழுவதும் கொண்டு சென்ற தங்க மகன் அஷ்ரபை பாராட்டுகிறேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.