அட்டாளைச்சேனை மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் மனைவி இன்று காலமானார்.
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் மனைவி இன்று (16) காலமானார்.
குறுகிய காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர், கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் றியா மற்றும் றியாஜத், றீஸ்மா ஆகியோரின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, கொழும்பிலிருந்து அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குக் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.