சிரியா போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்
இதனைத்தொடர்ந்து சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போர் விமானத்தை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் சரியாவில் ரக்கா உள்ளிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் அவர்களுக்கு எதிராக அமெரிக்கா படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அதிபர் பஷல் அல் -ஆசாத் ஆதரவு ராணுவ போர் விமானங்கள் ரக்கா மீது குண்டு வீசி தாக்கின. அப்போது அங்கு ஏற்கனவே முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது.
இதற்கு சிரியா கண்டனம் தெரிவித்தது. ஆனால் தங்களை காப்பாற்றி கொள்ளவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் சிரியாவின் ஆளில்லாத விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. தற்போது முதன் முறையாக சிரியா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.