News Update :

Friday, June 9, 2017

TamilLetter

அதாஉல்லாவின் அடியாளாக மாறும் அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர்

அதாஉல்லாவின் அடியாளாக மாறும் அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர்


அறுாஸ்
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில்சுமார் 11 ஆண்டு காலமாக கடமையாற்றி வரும்  வலயக் கல்விப் பணிப்பாளர் மீது  பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு   வருகின்றன.

அக்கரைப்பற்று வலயக் கல்விக்குட்பட்ட பல பாடசாலைகளில்  நிர்வாக சீர்கேடு நிலவுவதற்கு பல வழிகளிலும் இவர்  காரணமாக இருந்து வருகின்றார்.

பொறுப்பற்ற மற்றும் தகுதியற்றவர்களை தொடர்ந்தும்  அதிபராக வைத்துக் கொண்டு தனது சுயதேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றார்.

ஒய்வு பெரும் வரைக்கும் அக்கரைப்பற்றிலே தனது காலத்தை கழிக்க வேண்டுமென்பதற்காக அரசியல்வாதிகளின் கைப்பிடியாக மாறிவிட்டார்.

அதன் ஒரு அங்கமாக மக்களால் விரட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அரசியல் முகவராகவும் அவரின்  அடியாளாகவும்  இவர் இருந்து வருகின்றார்.

 மாகாண கல்வியமைச்சினால் அண்மையில்  வேறு ஒரு பிரதேசத்திற்கு  இவர்  இடமாற்றம் செய்த போது அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பிரதேச வாதத்தை கிளப்பி வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கிளர்ந்தெழுந்தனர்.

இந்த   வலயக் கல்விப் பிணப்பாளரினது நியாயமான இடமாற்றத்தை அரசியல் கண்ணோட்டத்திலும்  பிரதேச வாதத்தினாலும் பார்த்த எமது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் இன்று  என்ன  சொல்லப் போகின்றார்கள் என்பது கேள்வியாகவுள்ளது.

இன்று அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதாஉல்லா அதிதியாக கலந்து கொண்ட இப்தார் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பபாளரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.  

இதே வேளை கட்சியையும் தலைவரையும் விமர்சிக்கும் அதாஉல்லா இவ் நிகழ்வில் கலந்து  கொள்ளும் காரணத்தால் சுகாதார அமைச்சர் நஸீர,மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் இதில்    கலந்து கொள்ளவில்லை.

வலயக் கல்விப் பணிப்பாளரின் பல தவறுகளை அனுசரித்துப் போன முஸ்லிம் காங்கிரஸின் சுகாதார அமைச்சர் மற்றும் ,மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோரினது மனிதபிமான பன்புகளை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் கொச்சைப்படுத்தி விட்டார்.

இன்று முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரின் இது போன்ற நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் முக்ககியஸ்தர்கள் இன்னும் பொறுத்துக் கொள்வார்களா?









TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-