News Update :

Friday, June 30, 2017

TamilLetter

வீதியோரத்தில் சிறுநீர் கழித்த விவசாய அமைச்சர் - பரபரப்பு

வீதியோரத்தில் சிறுநீர் கழித்த விவசாய அமைச்சர் - பரபரப்பு


மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன்சிங், தமது மெய்க்காவல் அதிகாரிகளை நிறுத்தி வைத்துவிட்டு சாலையோரமாக சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில், மத்திய விவசாயத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ராதா மோகன்சிங், பொது இடத்தில் சாலையோரமாக நின்று சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு “தூய்மை இந்தியா திட்டம், இப்போது எங்கே போனது?" எனக் கேள்வி எழுப்பி ‘டிவிட் ’செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தப்படம் அசுரவேகத்தில் பரவலாகி வருகிறது. இது பீகாரில் மோதிஹாரியில் அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்றப்போது ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் கடந்த பட்ஜெட் தொடரின் போது 'தூய்மை இந்தியா' திட்டத்திற்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி இந்தப் படம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வழக்கம் போலவே வலைத்தளவாசிகள் 'அர்ச்சனை' ஆகப் பொழிகிறார்கள்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-