அமைச்சர் ரிஷாட்டை வேறு வழியில்லாமல் தலைவராக ஏற்றுக் கொள்ளும் அதாஉல்லா
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா வேறு வழியின்றி தன்னைவிட வயதிலையும் அரசியல் அனுபவத்திலும் குறைந்த ரிஷாட் பதியுதீனை தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவிட்டார்.
அதாஉல்லா தனிக்கட்சி தொடங்கி சுமார் 15ஆண்டுகள் உச்ச அதிகாரத்திலிருந்த போது மக்களின் மனங்களை வெல்ல முடியாமல் போன நிலையில் தற்போது வேறு வடிவில் அதிகாரத்தை அடைய வேண்டுமென்பதற்காக காத்துக்கிடக்கிறார்
மயில் கட்சியின் வருகையால் படு தோல்வியடைந்த அதாஉல்லா அதற்காக வேண்டி அண்மைக்காலமாக அமைச்சர் ரிஷாட்டுக்கெதிரான கருத்துக்களை கூறி வருவதுடன் அவரின் ஆதரவாளர்கள் சிலரும் முகநுால்களில் ரிஷாட்டை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
அமைச்சர் ரிஷாட்டை எதிர்ப்பதன் மூலம் நாம் எந்த நன்மையும் அடையப்போவதில்லை எனவும் ரிஷாட்டின் வாகனத்தில் பயணிப்பதன் மூலமே நாம் எதிர்பார்த்த இலக்கை அடையலாம் என்பதோடு ரிஷாட்டை விமர்சிப்பதை விட்டு விட்டு அவரோடு இணைவதே நமது எதிர்கால அரசியலுக்கு உகந்தது என இன்னும் ஓர் சாரார் அதாஉல்லாவுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அக்கரைப்பற்றில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்டை ஒரு சின்னப்புள்ள என்று மேடையில் பேசிய அதாஉல்லாவால் எப்படி ரிஷாட்டை தலைவராக ஏற்றுக் கொள்வது என்ற சங்கடத்துக்குள் அவர் சிக்கித் தவிக்கின்றார்.
இருந்தாலும் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ரிஷாட்டின் வாக்கு வங்கி கட்டாயம் தேவை என்பதை அதாஉல்லாவின் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை நன்கு புரிந்துள்ளார்.
அப்படி மீண்டும் அதாஉல்லா வெற்றிலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதற்கு விரும்பினால் தற்போது அவரோடு கடைசியாக இருக்கும் உதுமாலெப்பையையும் இழக்க நேரிடும் என்பதும் அவருக்கு இருக்கும் அச்சமாகும்.
எதுவாயினும் அதாஉல்லா ரிஷாட்டின் தலைமையின் கீழ் ஒன்று சேர்வதன் மூலமே ஒரு சிறிய அதிகாரத்தையாவது பெற வாய்ப்புள்ளதாக ரிஷாட்டின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.