News Update :

Tuesday, June 20, 2017

TamilLetter

இன்று மட்டக்களப்பில் அதிஷ்டவசமாக தப்பிய அமைச்சர்

இன்று   மட்டக்களப்பில் அதிஷ்டவசமாக தப்பிய அமைச்சர்


கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட போது அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில், அதிஷ்டவசமாக அமைச்சருக்கோ அல்லது வாகனங்களில் பயணம் செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
விபத்தினை தொடர்ந்து உதவிக்கு விரைந்த மற்றொரு வாகனத்தில் அமைச்சர் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-