மருதமுனை மீனவர்களுக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்.உதவி
அம்பாரை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் தொழிற்துறையை விருத்தி செய்யும் பொருட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்.பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
அதற்கமைவாக மருதமுனை நபா கரைவலை மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு ஒரு தொகுதி கடற்தொழில் உபகரணங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவ் அமைப்பின் நிர்வாகிகளிடம் வழங்கி வைத்தார்.
பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை மருதமுனையில் இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இப்தார் நிகழ்விலும் மாகாண சபை உறுப்பினர் தவம் கலந்து கொண்டார்.