News Update :

Wednesday, June 28, 2017

TamilLetter

ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை


ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை


மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹொரணை , போருவதன்ட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்நுழைந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் சுமார் ஒரு இலட்சம் ரூபாவினை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானத்தை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுவிட்டு குறித்த கொள்ளை சம்பவத்தினை அரங்கேற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விஷேட விசாரணையினை ஆரம்பித்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-