விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட பிறகு பயணிகளில் மூவர் வெடிகுண்டு, தீவிரவாதம் குறித்து மர்மமான முறையில் பேசிக் கொண்டிருந்ததை அடுத்து ஈசிஜெட் விமானம் ஜெர்மனில் அவசரமாக தரையிறங்கியது.
நேற்று இரவு ஈசிஜெட் விமானம் 151 பயணிகளுடன் லண்டனிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அமர்ந்திருந்த பயணிகளில் மூவர் தீவிரவாதம், வெடிகுண்டு, வெடிப்பொருட்கள் குறித்து பேசியதை அடுத்து சந்தேகம் கொண்ட விமானி உடனடியாக விமானத்தினை ஜெர்மன் விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
பின்னர், விமான பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவனின் கைப்பையை எடுத்து சென்று வெடிக்க வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. அப்பையில் என்ன இருந்தது மற்றும் மூவரும் யார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை