News Update :

Wednesday, June 21, 2017

TamilLetter

அதாஉல்லா அணியினரால் ஒன்றும் கிழிக்க முடியாது- அக்கரைப்பற்றில் கிழக்கு முதல்வர்

அதாஉல்லா அணியினரால் ஒன்றும் கிழிக்க முடியாது-  அக்கரைப்பற்றில் கிழக்கு முதல்வர்











இந்த ஆட்சியில் மட்டுமல்ல இனி எந்த ஆட்சியிலும் முஸ்லிம் காங்கிரஸ்தான் கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்யும் அதற்கான திராணியும் மக்கள் ஆதரவும் எமக்கே உள்ளது என அக்கரைப்பற்றில் நடந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர்  இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அக்கரைப்பற்று கடற்கரையில்   இடம் பெற்றது.இதில் வரலாறு காணாத மக்கள்  கலந்து கொண்டனர்

முதலமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தோல்வியடைந்த அதாஉல்லா தற்போது அரசியல் முகவராக செயற்படுகின்றார்.மக்கள் ஆதரவுடன் அவரால் ஒரு போதும் இனி பதவிக்கு வரமுடியாது.அதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸால் துரத்தப்பட்டவர்களோடு கூட்டணி அமைக்க ஒடோடித் திரிகிறார்.அது ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-