மத்திய வங்கியின் அறிக்கை - அமைச்சர் ஹக்கீம் பெருமிதம்
கடந்த வருடம் நாட்டின் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் நிறைவுப் பகுதியில் மொத்த நீர்விநியோக இணைப்புக்களின் எண்ணிக்கையை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 21 லட்சம் வரை அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்திய வருடத்துடன் ஒப்பிடும்போது 7 தசம் ஒரு சதவீத வளர்ச்சியாகும்.
மத்திய வங்கியின் புள்ளி விபரத்தினால் அமைச்சர் ரவுப் ஹக்கீம் உட்பட அதன் ஊழியர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.