News Update :

Thursday, June 8, 2017

TamilLetter

பொலிஸாரை தாக்கிய மர்ம நபர் சுட்டுக்கொலை: பரிஸில் பதட்டம்

பொலிஸாரை தாக்கிய மர்ம நபர் சுட்டுக்கொலை: பரிஸில் பதட்டம்



பரிஸின் நோர்த் டாம் தேவாலயத்திற்கு முன்னால் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். 
குறித்த பிராந்தியத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மீது தாக்குதலாளி சுத்தியலால் தாக்கி உள்ளார். தொடர்ந்தும் பொலிஸ் அதிகாரிகளை சந்தேகநபர் சுத்தியலோடு அச்சுறுத்திய நிலையில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இரு துப்பாக்கிச் சூடுகள் அவரின் தோளின் மீது சக பொலிஸ் அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலாளியின் நோக்கம் எதுவாக இருந்தது என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் தனித்துச் செயற்பட்டாரா அல்லது வேறு சகபாடிகளும் இருந்தார்களா? என்பதும் தெரிய வரவில்லை. தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி சிறு காயங்களுக்கு இலக்காகி உள்ளார்.
சம்பவத்தை அடுத்து நோர்த் டாம் தேவாலயப் பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் மக்களும் அங்கு வருவதை பொலிசார் தடுத்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கருதி தேவாலயத்தின் உள்ளே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சுத்தியலைப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரியைத் தாக்கியவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதிலும் அவர் காயங்களுடன் உயிருடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-