News Update :

Thursday, June 29, 2017

TamilLetter

கண்டுபிடிக்க முடியாத திடீர் மரணத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்


உலக வல்லரசுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஏகப்பட்ட பிரபுக்களும், அரசியல் தலைவர்களும் இருதயக் கோளாறு மற்றும் திடீர் மாரடைப்பிலும் இறந்த பதிவுகள் பல காணப்படுகின்றன.
ஆனாலும் அந்த மரணங்களுக்கான காரணங்கள் மட்டும் இன்று வரை மர்மமாகவே உள்ளன. உதாரணமாக கடந்த வருடம் இடம்பெற்ற அமெரிக்காவின் பிரபல நீதிபதியான ஸ்காலியாவின் (Scalia) மரணத்தினைக் கூறலாம்.
அமெரிக்காவிடம் சக்தி வாய்த ஆயுதங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதேபோன்று இரகசிய சதிகளுக்காகவும் பல பயங்கர ஆயுதங்கள் உள்ளதாவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அப்படியான ஓர் ஆயுதமே மாரடைப்பை ஏற்படுத்தும் துப்பாக்கி. 1975ஆம் ஆண்டு அமெரிக்காவின் சி. ஐ. ஏ (C.I.A) மூலமாக இந்தத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் துப்பாக்கி மூலம் சுடப்படும் போது ஒரு பயங்கர விஷம் உடலினுள் செலுத்தப்படும். அதன் மூலம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும்.
மிக முக்கியமாக இந்தத் துப்பாக்கியின் விஷத்தினை எந்த வித பரிசோதனைகளிலும் கண்டு பிடித்து விட முடியாது. இயற்கை மரணமாகவே கூறப்படும் அளவு அதன் விஷம் தானாகவே அழித்துக் கொள்ளும் திறன் வாய்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதேபோன்று ஒரு நுளம்பு கடிக்கும் போது ஏற்படும் உணர்வினை விடவும் சிறிய உணர்வே (வலியே) இதன் மூலம் சுடப்படும் போது ஏற்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
நீதிபதி Scalia வின் மரணமும் இதன் மூலமாகவே ஏற்படுத்தப்பட்டது என்ற சந்தேகம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. என்றாலும் விசாரணைகள் முறையாக இடம் பெறுவது சந்தேகமே.
ஏனைய நாடுகளிடம் இருக்கும் பயங்கர ஆயுதங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் அமெரிக்கா இது போன்ற பல சதி ஆயுதங்களை தம்மிடம் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-