News Update :

Tuesday, June 20, 2017

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு அழைப்பு

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு அழைப்பு



அக்கரைப்பற்று பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளால் வருடாந்தம் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறையும் சிறப்பாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு செயலாளருமான ஏ.எல்.தவம் தலைமையில் இன்று 21ம் திகதி அக்கரைப்பற்று கடற்கரையில் இதற்கான  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதில் பிரதம பங்குபற்றுனர்களாக மத்திய சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசீம்,விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சுர்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மாகாண சபை உறுப்பினர்களும் முன்னாள் உள்ளுராட்சி சபை தவிசாளர்கள்,உறுப்பினர்கள் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே இந் நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து கட்சிப்  போராளிகளையும் அன்புடன் அழைக்கிறேன்

என்.ரி.அஸ்மத்
இளைஞர் ஒருங்கிணைப்பாளர்
முஸ்லிம் காங்கிரஸ்
அக்கரைப்பற்று

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-