News Update :

Tuesday, June 20, 2017

TamilLetter

'உங்கள் விமானத்தை வீழ்த்துவோம்!' அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

'உங்கள் விமானத்தை வீழ்த்துவோம்!'  அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

சிரியாவின் அரசு இராணுவ விமானம் ஒன்றை அமெரிக்க தலைமையிலான கிளர்ச்சிப் படையினர் சுட்டு வீழ்த்தி இருப்பதால்   அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
 இது குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கும் ரஷ்யா, சிரியாவின் மத்திய பகுதியில் அமெரிக்கா விமானங்களையோ அல்லது ஆளில்லாத விமானமான டிரோன்களையோ தாங்கள் கண்டால் வீழ்த்த நேரிடும் என்று கூறியுள்ளது.
சிரியாவின் அதிபர் பாஸர் அல் அசாத்தின் முக்கிய ஆதரவாளராக விளங்கும் ரஷ்யா, தொடர்ந்து அமெரிக்காவுடன் தொடர்புகளைப் பேணப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. 
இதனிடையே சிரியாவிடமிருந்து தங்களைத் தற்காத்து கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு என்று அதன் தேசிய பாதுகாப்பு துறை, ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.
ராக்கா நகரிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்க ஆதரவு ஆயுதக் கும்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சிரியா இராணுவத்திற்குச் சொந்தமான விமானம் வீழ்த்தப்பட்டிருப்பது ரஷ்யா - அமெரிக்கா இடையே மோதலை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-