News Update :

Saturday, June 3, 2017

TamilLetter

மாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும்

மாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும்



உள்ளூராட்சி சபைத் தேர்தலைப்போல் மாகாண சபைத் தேர்தலையும் ஒரு வருடத்துக்கு ஒத்திப்போடுவதற்கு அரசு திட்டமிடுகின்றது என்றும் அதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்றும் மஹிந்த அணி எம்பி ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;
தோல்வி பயம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திப்போடப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன.இந்நிலையில்,மூன்று மாகாண சபைகளின் ஆயுட்காலமும் இந்த வருடம் செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ளது.உள்ளூராட்சி சபைத் தேர்தலைப்போல் இந்தத் தேர்தலையும் ஒத்திப்போடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்து மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிந்த பின்பு அனைத்து சபைகளுக்கும் ஒன்றாகவே தேர்தலை நடத்துவதற்கு அரசு விரும்புவதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.அரசு மாகாண சபைத் தேர்தலையும் ஒரு வருடத்துக்கு ஒத்திப்போடப் போவது நிச்சயம்.அவசர காலச் சட்டத்தைக் கொண்டு வந்தே இதைச் செய்யப் போகிறது.
மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படமாட்டாது.இன்னும் ஒரு வருடத்துக்கு சபை இயங்கும் என்று வாக்குறுதி வழங்கியே வட மத்திய மாகாண சபைக்கு எமது தரப்பில் இருந்த மூவரை அரசு வளைத்துப் போட்டு அமைச்சுப் பதவிகளைக் கொடுத்தது.அவர்களும் இன்னும் ஒரு வருடத்துக்கு அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற ஆசையில் அங்கு போய்ச் சேர்ந்தனர்.
எல்லாத் தேர்தல்களையும் இப்படி ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு அரசு எதைச் சாதிக்கப் போகின்றது.மக்களின் வாக்குரிமை இவ்வாறு மீறப்படுவதால் அரசுக்கு ஆதரவான மக்கள்கூட அரசுக்கு எதிராகத் திரும்புவர்.அரசு தனக்கு சாகத்தை ஏற்படுத்துவதற்காகச் செய்யும் இந்த செயல் அரசுக்கு பாதகமாகவே முடியப் போகின்றது.
மூன்று மாத முடிவில் ஆயுட்காலம் முடியும் மூன்று சபைகளுக்கும் உடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இல்லாவிட்டால் நாம் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்.உள்ளூராட்சி சபைத் தேர்தலைப்போல் இந்தத் தேர்தலையும் இழுத்தடிக்க நாம் விடமாட்டோம்.-என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-