News Update :

Sunday, June 11, 2017

TamilLetter

ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிகிறது ஒப்பந்தம்-

ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  

முடிகிறது ஒப்பந்தம்- 

இரண்டு ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான முக்கிய பேச்சுவாரத்தை மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளது. 

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கமாக செயற்பட இரண்டு கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும் என அரசியல் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

 இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவுக்கு வரும் நிலையில் தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் பிரதான இரண்டு கட்சிகளும் ஆலோசித்து வருகின்ற நிலையில் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-