News Update :

Wednesday, June 7, 2017

TamilLetter

சவுதிக்கு பதிலடி கொடுத்த கட்டார்


சவுதிக்கு பதிலடி கொடுத்த கட்டார்

சவுதிக்கு செல்லும் விமான சேவைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டதாக கட்டார் அறிவித்துள்ளது

இந்நிலையில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறி, கட்டார் நாட்டுடன் தங்கள் உறவை முடித்துக் கொள்வதாக  சவுதி, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்கனவே முடிவெடுத்திருந்தன. கட்டார் நாட்டுடன் தரை, கடல் மற்றும் வான்வழி தொடர்பை துண்டிக்க சவுதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பக்ரைன் உத்தரவிட்டுள்ளது.
அதனால் இனி அந்நாட்டிலிருந்து இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை பெற இயலாது. அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும். இந்நிலையில் சவுதி அரேபியாவுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டதாகக் கட்டார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உத்தியோகபூர்வ தகவல் கட்டார் ஏர்வேஸின் இணையதளத்தில் பதிவிடபபட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-