News Update :

Thursday, June 1, 2017

TamilLetter

விவசாயிகள் கண்முன்னே பொலிஸ் பாதுகாப்புடன் அழிக்கப்படும் நெற்செய்கை

விவசாயிகள் கண்முன்னே பொலிஸ் பாதுகாப்புடன் அழிக்கப்படும் நெற்செய்கை
 – இரணைமடு குளத்தின் நீர்பாசனம் மூலம் செய்கை பண்ணப்பட்ட மேலதிக நெற்செய்கையை அழிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
280 ஏக்கர் நெற் செய்கையை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கின் பாரிய நீர்பாசனத் திட்டமான இரணைமடு குளத்தின் மூலம் 850 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள
இம்முறை அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக 280 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்தமையினால், அதனை அழிப்பதற்கு கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன்படி, விவசாயிகள் தமது ஜீவனோபாயத்திற்காக மேற்கொண்ட நெற்செய்கை பச்சைப்பசேல் என அடர்த்தியாக வளர்ந்துள்ள நிலையில், அவற்றை அழிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

280 ஏக்கர் வயல் நிலத்தில் 47 ஏக்கர் பயிர் செய்கை விவசாயிகளின் கண்முன்னே இன்று பொலிஸ் பாதுகாப்புடன் அழிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு கமநல சேவை திணைக்களம் மற்றும் நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

பயிர் செய்கை மேற்கொள்வதற்கு முன்னரே அதனைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-