வடகொரியா விடுவித்த அமெரிக்க இளைஞர் ஒரே வாரத்தில் மரணம் !
வடகொரியாவை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் என்னும் இளைஞர் விடுவிக்கப்பட்டு ஒரே வாரத்தில் மரணமடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த குறித்த இளைஞன் வடகொரியாவை உளவு பார்த்தார் என்னும் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் இவருக்கு மூளை திசுக்களில் ஏற்பட்ட பாதிப்புக்களை அடுத்து இவர் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள இவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் விடுவிக்கப்பட்டு ஒரே வாரத்தில் துரதிஷ்டவசமாக மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள இவரின் குடும்பத்தினர் , வடகொரிய சிறையில் இவர் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார் எனவும் அதன் காரணமாகவே உயிரழ்ந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.