News Update :

Thursday, June 22, 2017

TamilLetter

பொத்துவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு-

பொத்துவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு- 



பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது அனுமதிப் பத்திரமின்றி விற்பனை செய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான மதுபான வகைகளை மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசபதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி அதிகாரிகள் இணைந்து இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது மூவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு வெளிநாட்டு பிராண்டி, பியர், வொட்கா, ரம், வைன், சாராயம் உட்பட பெருமளவிலான மதுபான போத்தல்கள் டின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுவரி அத்தியட்சகர் சுசாதரன் தலைமையிலான மதுவரி அதிகாரிகளினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-