வானில் தோன்றிய அதிசயம்
ஜுன் 22- மாலை நேரம் வானத்தில் வானவில் தோன்றினால் சந்தோசப்படும் நாம், நான்கு வண்ணத்தில் தூண்கள் போன்று காட்சியளிக்கும் வெளிச்சத்தைக் கண்டால் எப்படி இருக்கும்? இதே ஆனந்தம் தான் இரவு நேரத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக்காரர்களுக்கு ஏற்பட்டது.
சபாவில் உள்ள கூடாத் எனும் வட்டாரத்திலிருந்து 31 கிமீ தூரத்தில் இருக்கிறது கெலாம்பு தீவு. ஆள் நடமாட்டம் இல்லாத அழகிய தீவு இது. கெலாம்பு என்றால் மலாய் மொழியில் கொசு வலை என்று அர்த்தம். இந்த தீவும் அப்படி தான். தீவிற்கும் கடலுக்கும் நடுவில் நடந்து மணல் பாதை ஒன்று இயற்கையாகவே அமைந்திருக்கும்.
இங்கு புகைப்படக்காரர்கள் படங்களை எடுக்க அடிக்கடி இங்கு வருவதுண்டு. அப்படி சில புகைப்படக்காரர்களின் காமிரா கண்ணில் சிக்கியது தான் இந்த ஒளித்தூண்கள். அது என்ன ஒளித்தூண்கள்? குளிர்காலத்திலோ அல்லது வட துருவங்களிலோ நடக்கும் ஒளியியல் மாயை தான் இந்த வெளிச்சம்.
அதாவது கரைக்கு அருகில் கிடக்கும் ஐஸ் கட்டிகள் மீது இயற்கையாகவோ செயற்கையாகவோ வெளிச்சம் படும்போது வெளிச்சத்தின் வண்ணத்தை இந்த கட்டிகள் பிரதிபலிக்கும். இது நீள் வடிவில் தெரிவதால் இதற்கு ஒளித்தூண் என்று பெயர் வழங்கப்பட்டது.
கெலாம்பு தீவுக்கு அருகில் நேற்று இரவு இந்த காட்சி உருவாகியுள்ளது. அதில் ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஒளி அழகாக தெரிந்துள்ளது.
இதனை ஆண்ட்ரூ ஜேகே டான் என்பவர் இரவு 9 மணிக்கு இந்த ஒளித்தூண்களைப் பார்த்துள்ளனர். பின்னர் பின்னிரவு 1 மணியளவில் இந்த வெளிச்சம் மறைந்ததாக அவர் கூறியுள்ளனர். இந்த காட்சியைத் தான் வாழ்நாள் முழுதும் காத்திருந்தாலும் பார்க்க முடியாத அபூர்வ நிகழ்வு. இதனை நான் மறக்கவே மாட்டேன் என்று ஆண்ட்ரூ கூறியுள்ளார்.
இதற்கு முன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கினபாலுவில் இந்த ஒளித்தூண்கள் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.