நாடாளுமன்றத்தில் பதற்றம்! எம்பி-க்கள் துப்பாக்கி முனையில் சிறைப்பிடிப்பு
நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் எம்.பிக்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மர்ம நபர்களுக்கும் ஈரான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. எம்பிக்களை சிறைப்பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள.
பாதுகாப்பு அதிகாரி ஒருவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்திய நபர்கள் மற்றும் காரணம் குறித்த எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.