News Update :

Thursday, June 29, 2017

TamilLetter

ஊடகங்கள் இனவாதத்தை கக்குகின்றன: ரிஷாத்



பிளாஸ்டிக் அரசி விடயத்தில் சில ஊடகங்கள் இனவாத நோக்கில் செய்திகளை பிரசுரிப்பதாக, கைத்தொழில் மற்றும் வா்த்தக அமைச்சா் ரிஷாத் பதியுதீன் குறிப்பிடுகின்றார்.

95ஆவது சர்வதேச கூட்டுறுவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளா் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அரிசி குறித்து ஊடகவியலாளா்கள் கேள்வி எழுப்பினா். இந்த கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சா் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 அங்கு அவா் தொடா்ந்தும் குறிப்பிடுகையில்,
”இந்த நாட்டிலே மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒரு சில அணிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. நான் முஸ்லிம் அமைச்சா் என்பதாலும், பாகிஸ்தான் முஸ்லிம் நாடு என்பதாலும், பிளாஸ்டிக் அரிசி விடயத்திலும் அந்த இனவாத குழு தமது செல்வாக்கினைப் பிரயோகின்றது.

இந்த விடயத்தில் சில ஊடகங்களும் இனவாத கண்ணாடியைப் போட்டுக் கொண்டு, முஸ்லிம் அமைச்சர், முஸ்லிம் நாடு என்ற ரீதியிலேயே செய்திகளை வெளியிடுகின்றன.
இந்த விடயத்தில் ஈடுபட்ட நபா்களை அடையாளம் கண்டுள்ளோம். பின்னால் இருந்து அவா்களை செயற்படுத்தியவா்கள் யார் என்றும் கண்டறிந்துள்ளோம்.

அவ்வாறு செயற்பட்டவா்களுக்கு எதிராக சதொசவினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஊடாக தவறிழைத்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-