புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளன. புதிய அரசியலமைப்பு சட்டத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்திய மாற்றக் கூடிய எந்த பந்திகளிலும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மற்றும் மக்களின் ஆதிபத்தியத்திற்கு உட்பட பந்திகளும் இதில் அடங்கும்.
இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதன் போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
பதவிக்காலம் முடியவுள்ள கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தேர்தலை ஒத்திவைக்கவும் இரண்டு கட்சிகளும் இணங்கியுள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்கு ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைப்பது குறித்து இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
Saturday, June 24, 2017
சர்வஜன வாக்கெடுப்புத் திட்டத்தை ஐதேக – சுதந்திரக்கட்சி கைவிட்டன!

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-