அமைச்சர் ரவுப் ஹக்கீமால் ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி
மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஆயிரம் கட்டில் மெத்தைகளை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்து வழங்கி வைத்தார்.
மெத்தைகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது. இதன் போது அக்குரஸ்ஸ பள்ளிவாசல் மற்றும் கொரதொட விகாரை போன்றவற்றுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் பகிர்ந்தளித்தார்.