பல்துறை ஆளுமைமிக்க கல்விமான் முஸ்தபா சேர் - அனுதாபச் செய்தியில் தவம்
பல்துறை ஆளுமைமிக்க சிறந்த மனித நேயமுள்ள மூத்த கல்விமான் எம்.ஐ.எம்.முஸ்தபா ஸேர் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவருமான ஏ.எல்.தவம் இன்று விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை கல்வியற் கல்லுாரியின் முன்னாள் சிரேஷ்ட உடற்கல்வி விரிவுரையாளராக கடமையாற்றிய முஸ்தபா ஸேர் தேசிய மட்டத்தில் சாரணியத்தில் பல சாதனைகளை பெற்றவர்.
அத்தோடு அம்பாரை மாவட்டத்தின் உதைப்பந்தாட்ட வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய முஸ்தாப ஸேர் ஓய்வு பெற்ற போதும் தனது இறுதிக் காலம் வரை இளமையுடன் அதற்காக பாடுபட்டார்
சமூகத்தில் தலைசிறந்த ஆசானாக திகழ்ந்த முஸ்தபா ஸேர் மாணவர்கள் மற்றும் மக்களின் மனங்களில் என்றும் அழியாத நினைவாக அவரின் பன்புகள் காட்சி தரும்.
அன்னாரின் இழப்பு கல்முனைக்கும் அம்பாரை மாவட்டத்திற்கும் பாரிய பேரிழப்பாகுமென கண்ணீருடன் தெரிவித்தார் ஏ.எல்.தவம்