News Update :

Friday, June 2, 2017

TamilLetter

அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் விவகாரம் - புதியவருக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியம்

அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் விவகாரம் - புதியவருக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியம்

எம்.எ. முஸாதீக்


அட்டாளைச்சேனையின் தேசியப்பட்டியல் விவகாரம் பல காரணங்களால் பல தடவைகள் மறுக்கப்பட்டு வருகின்றது.இதற்கு தலைமைத்துவம் உட்பட உள்ளுர் கட்சி முக்கியஸ்தர்களும் காரணமாக காணப்படுகின்றனர்.

சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பே அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு கட்சித் தலைவரால் தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான கலந்துரையாடலில் சம்மந்தப்பட்ட நபர்களோடு ஈடுபட்ட போது எம்.பியை பெறுவதற்கான ஆர்வத்தை சம்மந்தப்பட்டவர்கள் காட்டவில்லாததால் தலைமை மாற்று நடவடிக்கையை கையாள வேண்டி ஏற்பட்டது.

இன்று காலங்கள் கடந்த நிலையில் அட்டாளைச்சேனை எம்.பி பதவிக்கு புதிய ஒரு நபரை தெரிவு செய்து வழங்க வேண்டுமென தலைமைக்கு அட்டாளைச்சேனையை சேர்ந்த   புத்தி ஜீவீகளால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன் தேசியப்பட்டியலை வழங்க முற்படும் போது பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால்.மாகாண சபை கலைக்கப்பட்டவுடன் அட்டாளைச்சேனைக்கு தாம் விரும்பி நபருக்கு  எம்.பியை வழங்குவதால் யாரும் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் தலைமை உள்ளது.

அத்தோடு அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தற்போதைய சுகாதார அமைச்சரை போட்டியிட வைப்பதோடு புதிய முகத்திற்கு தேசியப்பட்டியல் எம்.பியை வழங்குவதன் மூலம் கட்சியின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கலாம் என தலைமை கணக்குப் போட்டுள்ளது.

அப்படியான தீர்மானத்தை கட்சித் தலைமை எடுக்குமானால்  மாகாண சபை உறுப்பினர் மற்றும் எம்.பி.என இரண்டு அதிகாரங்கள் அட்டாளைச்சேனைக்கு கிடைப்பது நல்ல விடயமென மூத்த கட்சிப் போராளி ஒருத்தர்  தெரிவித்தார்.

தேசியப்பட்டியல் நியமன எம்.பி பெறப்போகும் அந்த நபர் யார் என்பது தொடர்பாக  சில  முக்கிய கட்சிசாரா பிரமுகர்களிடம்  தலைமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி வருகின்றது.

இத் தகவல் ஒரளவு கசிந்தவுடன் பல முக்கியஸ்தர்கள் தலைவரின் இத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதுடன் எம்.பியை பெறுவதிலும் தமது விருப்பத்தை தலைவரிடம் தெரிவித்தனர்.

எது எப்படியோ மாகாண சபை தேர்தலுக்கு முன் தேசியப்பட்டியல் வழங்கப்படுமாயின் எதிர்பார்க்கும் நபர்களுக்கு அது சாதகமாகவும் தேர்தலுக்கு பின்னராயின் எதிர்பார்க்கும் புதியவருக்கு அதிஷ்டமாகவும் மாறக் கூடும்










TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-