News Update :

Wednesday, June 28, 2017

TamilLetter

பிரதியமைச்சர் பைஸல் காசீமின் கட்டுப்பாட்டிலா? அட்டாளைச்சேனை


பிரதியமைச்சர் பைஸல் காசீமின் கட்டுப்பாட்டிலா?  அட்டாளைச்சேனை
அர்ஷாட்
  அட்டாளைச்சேனை,பாலமுனை,ஒலுவில்,ஆலம்குளம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்ற அதிகமான அபிவிருத்திகள்  பிரதியமைச்சர் பைஸல் காசீமின் நிதியொதுக்கீட்டின் மூலமே நடைபெற்றுள்ளது.

சிறந்த மனித நேயமுள்ள பிரதியமைச்சரின் பன்பைக் கண்டு அட்டாளைச்சேனையின்  முக்கிய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பைஸல் காசிமுக்கே தமது முழு   ஆதரவையும்  தெரிவித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் உயர்பீட உறுப்பினர்களான பளீல் பீ.ஏ.டாக்டர் நக்பர்.முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன்,அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் பொருலாளர் ஏ.எல்.பத்தா,போராளிகளான சுபியான்,மக்கீன் என ஆதரவு தெரிிவிக்கும் பெயர்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

பிரதியமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துவரும்  ஒரு   சிலர்   கருத்து தெரிவிக்கையில்

அட்டாளைச்சேணை மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிக்காக சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் அவர்களின் நிதியொதிக்கீட்டில் வைத்தியசாலையின் கட்டுமாணப் பணிகளுக்கு   2 கோடி ரூபாயும் ,தாதியர் விடூதி, , வைத்திர்கள்வ  விடுதி   அகியவற்றுக்காக 1கோடி ரூபாவும் வழங்கி வழங்கியுள்ளார்.அதன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது..
மேலும் இவ்வைத்தியசாலைக்கு இந்தண்டிற்கான நிதியொதுக்கீட்டில்  5 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளார். அந்த வகையில் அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு மட்டும்   8கோடி 40 லட்சம்  ரூபா வழங்கப்பட்டுள்ளது.

ஒலுவில்,பாலமுனை பிரதேச வைத்தியசாலைகளுக்கும் தொடர்ச்சியாக   அதிகமான நிதியையும் பைஸல் காசீம் வழங்கியுள்ளார்.

அதேபோல்  கல்வி அபிவிருத்திக்கும் பல பாடசாலைகளுக்கு பௌதீக வளங்களை பிரதியமைச்சரால் வழங்கப்பட்டதுடன்   அட்டாளைச்சேணை தேசிய பாடசாலைகளுக்கு ஆராதணை மண்டபம் (autitoriam)  அமைப்பதற்கான நிதியும்  வாழங்கப்பட்டு அதன்   வேலைகள்  புர்த்தியாகும் நிலையில் உள்ளது.

ஒவ்வொறு முறையும் விளையாட்டுக் கழகங்களின் முன்னேற்றத்திற்காக பல இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.

வைத்தியசாலை உட்பட பல திணைக்களகளத்தில்  பல பேருக்கு தொழில் வாய்ப்பையும் பிரதியமைச்சர் அட்டாளைச்சேனை இளைஞர்களுக்கு வழங்கியுள்ளார்.
இப்படியான அணைத்து  விடயங்களுக்கும் உதவி புரிந்து வரும் பிரதியமைச்சர் பைஸல் காசிக்கு அட்டாளைச்சேனை மக்கள் கடமைப்பட்டுள்ளனர்.

பிரதியமைச்சரின் எத்தனையோ வேலைத் திட்டங்கள் வெளியில் தெரியாமல் ஒரு சிலர் மூடி மறைத்துள்ளனர்.மிக விரைவில் அவரால் மேற்கொள்ளப்பட்ட  வேலைத்திட்டங்களை மக்களுக்கு புத்தக வடிவில் தெரியப்படுத்தவுள்ளோம் என தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-