இலங்கையர்கள் நாடுகடத்தப்படுவார்கள் - சவூதி அரேபியா எச்சரிக்கை
சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் இலங்கையர்கள், பொதுமன்னிப்பு காலம் நிறைவடைந்த பின்னரும் அங்கு தங்கியிருக்கும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய அரசாங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்த மாதம் 25ஆம் திகதியுடன் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலம் நிறைவடைகிறது.
இந்த கால அவகாசம் மீண்டும் எந்த காரணத்துக்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறு தங்கியிருப்பவர்கள், கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதுடன், அவர்கள் மீண்டும் சவூதிக்கு வரமுடியாதவாறு தடை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.