News Update :

Tuesday, June 20, 2017

TamilLetter

பிரெஞ்சுப் போர்க்கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பிரெஞ்சுப் போர்க்கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள பிரெஞ்சுப் போர்க்கப்பல்களை, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று பார்வையிட்டார்.
பிரெஞ்சுக் கடற்படையின் மிஸ்ரால் (‘Mistral’)  எனப்படும் பாரிய தரையிறக்க மற்றும் உலங்குவானூர்தி தாங்கி கப்பலும், கோர்பெட் (Courbet) என்ற போர்க்கப்பலும் நேற்று கொழும்பு வந்தன.

இந்தக் கப்பல்களுக்கு நேற்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சென்று பார்வையிட்டதுடன், பிரெஞ்சு கடற்படை அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தினார்.
இதன் போது பிரெஞ்சுக் கடற்படையினர் தமது போர்க்கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு அணிவகுப்பு மரியாதையை அளித்திருந்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-