News Update :

Tuesday, June 20, 2017

TamilLetter

பிரதேச சபைத் தேர்தல் ஒக்டோபரில் தேர்தல்கள் -ஆணைக்குழுவின் தலைவர்

  பிரதேச சபைத் தேர்தல்  ஒக்டோபரில் தேர்தல்கள் -ஆணைக்குழுவின் தலைவர் 


உள்ளூராட்சி மன்றங்கள் குறித்த தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஜுலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டால், ஒக்டோபர் மாதம் அளவிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கெஃபே நடத்திய கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகர் கைச்சாத்திட்டதன் பின்னர், தேர்தல்களை ஒழுங்கு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு குறைந்த பட்சம் 75 நாட்கள் அவகாசம் தேவைப்படும்.
தேர்தல்கள் தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும், தயார்ப்படுத்தலிற்குமான காலப்பகுதியாக இது அமையும்” என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-