News Update :

Tuesday, June 27, 2017

TamilLetter

சையத் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா!


சையத் சலாவுதீன் எனபவர் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டுள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகின்றார்.
இவரை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக தற்போது அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டது.
காஷ்மீரைச் சேர்ந்த சலாவுதீன், காஷ்மீர் பிரச்னையில் அமைதியான தீர்வை எதிர்க்க உறுதி பூண்டிருப்பதாலும், மேலும் பல தற்கொலை படையினருக்கு பயிற்சியளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாலும் இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளது.
அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. காஷ்மீரில் நிலவும் அசாதரண சூழலுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதமே காரணம் என இந்தியா பல ஆண்டுகளாக கூறிவருவது தற்போது நிருபிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-