News Update :

Friday, June 2, 2017

TamilLetter

அநுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

அநுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அanura-senanayakeநுர சேனாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரை 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபாவான 03 சரீரப் பிணைகளில் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்றும், வௌிநாடு செல்ல தடை செய்து கடவுச்சீட்டை நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறும் அநுர சேனாநாயக்கவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணை பெற்றுக் கொண்டதன் பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கோ அல்லது சாட்சியாளர்களுக்கோ அழுத்தங்களை பிரயோகித்தால் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைப்பதாகவும் நீதிபதிகள் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த அண்டு மே மாதம் 23ம் திகதி கைது செய்யப்பட்ட அநுர சேனாநாயக்க இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-