News Update :

Wednesday, June 21, 2017

TamilLetter

சுகாதார அமைச்சிற்குள் பலவந்தமாக நுழைந்த மாணவர்கள் - பொலிஸார் மோதல்

சுகாதார அமைச்சிற்குள் பலவந்தமாக நுழைந்த மாணவர்கள்  - பொலிஸார் மோதல்

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், சுகாதார அமைச்சிற்குள் பலவந்தமாக நுழைந்தனர்.

அவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

மருத்துவ செயற்பாட்டு மாணவர் குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள், லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து பேரணியை ஆரம்பித்தனர்.

இவ்வாறு பேரணியாக சென்றவர்கள் சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்தனர்.

அமைச்சின் பிரதான கட்டடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துரையாடலொன்று அவசியம் என கோரினர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இடையூறின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்தனர்.

அமைதியாக கலைந்துசெல்லுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது காயமடைந்த 80 மாணவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

காயமடைந்த விசேட அதிரடிப்படையினர் ஐவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் அமைச்சுக்குள் நுழைந்தமையால் அமைச்சின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-