அட்டாளைச்சேனையின் இறுதித் தருணம்- சட்டத்தரணி கபுர் சாதிப்பாரா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சிப் பாதையிலும் பெரும் பங்காற்றியவர் கட்சியின் ஸ்தாபக செயலாளர் எஸ்.எம்.ஏ. கபுர் சட்டத்தரணி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தலில் தேசியப்பட்டியலுக்காக கபுரின் பெயர் தேர்தல் ஆணையாளருக்கு அப்போதைய தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொறு தேர்தல்களிலும் ஸ்தாபக செயலாளரின் பெயர் தேசியப்பட்டியல் எம்.பிக்காக தொடர்ச்சியாக பரிந்துரை செய்யப்பட்டே வந்துள்ளது.
இன்று முப்பது வருடங்கள் கழிந்த நிலையிலும் அட்டாளைச்சேனைக்காவது தான் உயிரோடு இருக்கும் போதே அந்த தேசியப்பட்டியலை பெற வேண்டுமென்பதில் அயராது பாடுபட்டு வருகின்றார்.
கட்சியின் தலைவரை அண்மையில் சந்தித்து அட்டாளைச்சேனையின் தேசியப்பட்டியல் நிலவரம் தொடர்பாக பேசியுள்ளார்.
அதற்கு தலைவர் நாட்டில் வெள்ளம் மற்றும் பொதுபலசேனவின் இன முரண்பாடு என்பன சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.அமைதியான சூழ்நிலை தோன்றட்டும் என்று பதிலளித்துள்ளார்.
இன்று நாட்டில் அமைதியான சூழ்நிலை தோன்றியிருப்பதுடன் அட்டாளைச்சேனையில் நடைபெரும் இப்தார் நிகழ்வுக்காகவும் அமைச்சர் வரவுள்ளார்.
எனவே அட்டாளைச்சேனைக்கு வரும் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமுடன் இறுதியான ஒரு தீர்மானத்தை சட்டத்தரணி கோரவுள்ளதாகவும் கடந்த வருட புனித தினத்தில் தலைவர் வழங்கிய வாக்குறுதியை இவ்வருட புனித தினத்தில் நிறைவேற்றுவார் என்றும் நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது