News Update :

Thursday, June 1, 2017

TamilLetter

ரவுப் ஹக்கீம் நேர்மையான தலைவர் அதனால்தான் அவரின் அமைச்சு மாற்றப்படவில்லை - ஜனாதிபதி

ரவுப் ஹக்கீம் நேர்மையான தலைவர் அதனால்தான் அவரின்  அமைச்சு மாற்றப்படவில்லை - ஜனாதிபதி 

எஸ்.சபறுல்லா
அமைச்சரவை மாறற்றத்தின் போது ஒரு குறிப்பிட்ட ஒரு சிலரின் அமைச்சுகளே மாற்றம் செய்ய வேண்டி ஏற்பட்டதே தவிர மற்ற அமைச்சுக்களின் அமைச்சர்களை தற்போதைக்கு மாற்றுவதற்கான எந்த தேவையும் ஏற்படப் போவதில்லையென ஜனாதிபதி இன்று காலை இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்து கருத்து  தெரிவிக்கையில் மழை நின்று போனாலும் இன்னும் துாரல் நின்று போகவில்லை என்பது போல் கடந்த ஆட்சியின் மோசமான நபர்கள் இன்னும் எம்மை விட்டு நீங்கவில்லை இதன் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் சில சங்கடங்கள் ஏற்படுகின்றது. அது காலப் போக்கில் மறைந்து போய்விடும்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்படுகின்றது.அமைச்சரவை மாற்றம் என்பது சாதரணமாக நடைபெரும் ஒரு நிகழ்வு இதை பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. சில அமைச்சர்கள் சிறப்பாக தேசியம் என்ற கொள்கையில் செயற்படுகின்றனர்.அந்த வகையில் பல அமைச்சர்களின் பெயரைக் குறிப்பிடலாம்.

நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சு மக்களின் தேவை கண்டு  சிறப்பாக செயற்படுகின்றது.அதன் அமைச்சர் ரவுப் ஹக்கீம் நேர்மையானவர்.அத்தோடு ஒரு சமூகத்தின் தலைவரும் கூட என மேலும் தெரிவித்தார்.ஜனாதிபதி














TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-