மாணவி ஒருவர் மீது, ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தையடுத்து ஆசிரியர், பெற்றோர், மாணவர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் தந்தை ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொட்டகலையில் உள்ள பாடசாலையில், ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர்கள் சம்பவம் தொடர்பில் முறையிட இன்று பாடசாலைக்கு சென்ற போது, அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆசிரியர் ஒருவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தந்தை ஒருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தால் குறித்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, பாடசாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
Friday, June 30, 2017
மாணவி மீது இரும்பு கம்பியால் தாக்குதல் : ஆசிரியர், பெற்றோர், மாணவர்களிடையே மோதல்

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-