News Update :

Sunday, June 25, 2017

TamilLetter

சம்பந்தன், ஹக்கீம், அநுர, கரு ஆகியோர் ஜேர்மன் சென்றனர் : காரணம் வெளியாகியது




சபாநாயகர் கரு ஜெய தலைமையிலான முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று ஜேர்மன் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை பயணித்துள்ளது.

இக்குழவில் எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் சரத் அமுனுகம கயந்த கருணாதிலக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி கொறடாவுமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்வரும் ஐந்து தினங்கள் ஜேர்மனில் தங்கியிருக்கும் இக்குழுவினர் அந்நாட்டு அரசியலமைப்பு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தறியவுள்ளனர்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜேர்மன் சபாநாயகர் இலங்கையில் புதிய அரசியலமைப்பிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை கருத்திற் கொண்டு சுபீட்சமான ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கத்தினை அடைந்து கொள்வதற்கான தமது முழமையான ஒத்துழைப்புக்களை நல்குவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக தமது நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான அனுபவத்தினை பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆதற்கிணங்க சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் பாராளுமன்ற அரசியல் கட்சி தலைவர்களை தமது நாட்டிற்கு வருகை தருமாறும் அழைப்பை விடுத்திருந்தார்.

இந்நிலையில் “அரசியல்பார்வை” என்ற தலைப்பில் மேற்படி விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கு குழுவினர் ஜேர்மனில் காணப்படும் அரசியலமைப்பு உட்பட ஏனைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு அரச உயர்மட்டத்தினரையும் துறைசார் நிபுணர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-