News Update :

Tuesday, June 20, 2017

TamilLetter

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கடுமையான நடவடிக்கை


சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கடுமையான நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த கட்சியின் மத்திய செயற்கழு தெரிவித்துள்ளது.
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுகின்றமை, தலைமையை விமர்ச்சிக்கின்றமை, வேறு கட்சிகளை உருவாக்கும நோக்கில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை தூண்டியமை அல்லது அதற்கு ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர் மத்திய செயற்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளபோதிலும் குறித்த உறுப்பினர்கள் அதனை நிராகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அந்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விசாரணைகளின் நிறைவில் குறித்த 14 பேர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-